ஐ.நாவின் விமர்சனங்களை பொருட்படுத்தாதமல் ஏமனில் தேசிய நிர்வாக கவுன்சில் அமைப்பு

ஏமனில் உள்ள ஹூதி போராளி இயக்கம் மற்றும் அதன் கூட்டணி அங்கத்தினர், ஐ.நாவின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தேசிய நிர்வாக கவுன்சிலை அமைக்க முடிவெடுத்துவிட்டனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே

செய்தி குறிப்பு ஒன்றில், கவுன்சிலுக்கான புதிய உறுப்பினர்களை போராளிகள் அறிவித்துள்ளனர்.

இந்த உறுப்பினர்கள் ஹவுதி இயக்கத்திலிருந்தும் மற்றும் முன்னாள் அதிபரான அலி அப்துல்லா சலேவின் ஆதரவாளர்கள் ஆகிய இருதரப்புகளிலிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புதிய கவுன்சிலை உருவாக்குவது ஏமன் நாட்டின் அரசியலமைப்பை மீறுவது என்றும், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் போராளிகள் இடையே போரை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் எட்டப்பட்ட முன்னேற்றத்துக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக இருக்கும் என ஐ.நா கூறியுள்ளது.