பெல்ஜியம் தாக்குதலில் ஈடுபட்டவர் அடையாளம் வெளியீடு

பெல்ஜியத்தில் கடந்த சனிக்கிழமையன்று, இரண்டு பெண் போலிசார் மீது வெட்டுக்கத்தி தாக்குதல் நடத்தியவர், ஒரு அல்ஜீரியா பிரஜை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

அவரை கே.பி என வழக்கறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 2012ல் இருந்து அவர் பெல்ஜியத்தில் வாழ்ந்ததாகவும், அவர் மீது குற்றவியல் பதிவுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

போலிஸாரால் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னதாக, சார்லர்வாவில் உள்ள முக்கிய காவல் நிலையத்திற்கு வெளியே தாக்குதலின் போது அந்த தாக்குதல்தாரி 'அல்லாஹூ அக்பர்' ( கடவுள் பெரியவர்) என சத்தமிட்டார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

ம்