சீனா: உலகத் தாய் பாலூட்டுதல் வாரப் பரப்புரை நிகழ்வுகள் (புகைப்படத் தொகுப்பு)

இவ்வுலகில் பிறக்கின்ற குழந்தைகள் அனைவருக்கும் தாய் பால் அருந்துகின்ற உரிமையும், தாய்மாருக்கு தங்களுடைய குழந்தைகளுக்கு தாய் பாலூட்டுகின்ற கடமையும் இருக்கிறது.

ஆகஸ்ட் முதல் நாள் தொடங்கி, 7 ஆம் நாள் வரை நடைபெறும் உலகத் தாய் பாலூட்டுதல் வாரத்தை முன்னிட்டு, சீனாவின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த பரப்புரை நிகழ்வை இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption சீனாவின் ஷாங்காய் மாநகரிலுள்ள தேசிய ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்ற பரப்புரை நிகழ்வில் 40 அன்னையர் இணைந்து தங்களுடைய குழந்தைகளுக்கு தாய் பாலூட்டினர்
படத்தின் காப்புரிமை Getty
Image caption சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் நான்ஜிங்கில் நடைபெற்ற பரப்புரை நிகழ்வில் நகர ரயிலில் வைத்து 15 அன்னையர் தங்கள் சேய்களுக்கு தாய் பாலூட்டினர்
படத்தின் காப்புரிமை Getty
Image caption 15 தாய்மார் தங்கள் சேய்களுக்கு தாய் பாலூட்டுதல்
படத்தின் காப்புரிமை Getty
படத்தின் காப்புரிமை Getty
Image caption சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியானில் வணிக வளாகத்தில் நடைபெற்ற பரப்புரை நிகழ்வில் 50 அன்னையர் தங்கள் குழந்தைகளுக்கு தாய் பாலூட்டுதல் நிகழ்வில் கலந்து கொண்டனர்

குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் தாய் பாலூட்ட வேண்டும் சிந்தனையை பரவலாக்க உலகச் சுகாதார நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

குழந்தைகள் பிறந்த ஆறுமாதத்திற்கு தொடர்ந்து தாய் பாலூட்டுவதால், நோய் தொற்றுகளில் இருந்தும், இறப்பிலிருந்து குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றன என்பதை ஆய்வுகள் சுட்டுகின்றன.

அன்னையர் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய் பாலூட்டுவதை புகைப்படம் எடுத்து கொள்வதை வலியுறுத்தி ஐநா இந்த ஆண்டு பரப்புரை மேற்கொண்டுள்ளது.