இந்தியா: வெள்ளப்பாதிப்பால் உணவின்றி தவிக்கும் பீகார் கிராம மக்கள்

பீகாரில் உள்ள ஒரு கிராம மக்கள், நதியின் நடுவே தீவில் அமைந்துள்ள தங்கள் வீடுகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு விட்டதால், தங்களுக்கு உண்ணுவதற்கு எலிகளைத் தவிர வேறொன்றும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP

அதிகாரிகளிடமிருந்து உணவு நிவாரணம் வரவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பெரும் பகுதிகள் மழையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.

பல வட இந்திய நதிகள் ஆபத்தான நிலையில், உயர்ந்த அளவில் பாய்ந்து கொண்டிருக்கின்றன.

பாகிஸ்தானின் முக்கிய பெரு நகரான கராச்சியில், வியாழக்கிழமையிலிருந்து மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 20க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன;

மேலும் பலுச்சிஸ்தான் மாகாணத்தில், கார்கள் அடித்துச் செல்லப்பட்டு குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.