சிறையில் இருக்கும் ஆஸ்கர் பிஸ்டோரியஸிற்கு மருத்துவ சிகிச்சை

சிறையில் காயமடைந்த ஆஸ்கர் பிஸ்டோரியஸிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை epa
Image caption ஆஸ்கர் பிஸ்டோரியஸ்

தனது தோழியை கொன்ற குற்றத்தில் ஆறு வருட சிறைத்தண்டனையில் இருக்கும் பிஸ்டோரியஸ், தனது மெத்தையிலிருந்து கீழே விழுந்துவிட்டதாகவும், ஆனால் தற்போது சிறைக்கு திரும்பிவிட்டதாகவும் சிறை சேவை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிஸ்டோரியஸின் மணிக்கட்டுகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு ஆண்டு சிறை தண்டனை அதிகப்படியான கருணை அடிப்படையில் கொடுக்கப்பட்டது போல் உள்ளதாகவும், ஆகையால் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தென் ஆப்ரிக்க அரசு வழக்கறிஞர்கள் கடந்த மாதம் தெரிவித்திருந்தனர்.

பிஸ்டோரியஸ் தனது தோழியான ரீவா ஸ்டீன்கப்பை தனது விட்டில் காதலர் தினத்தன்று சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.