பிரிவினைவாதத் தலைவர் மீதான குண்டு தாக்குதலில் ஈடுபடவில்லை - யுக்ரேன்

படத்தின் காப்புரிமை AP
Image caption கோப்புப்படம்

யுக்ரேனின் கிழக்கில் நடைபெற்றுள்ள, பிரிவினைவாதத் தலைவர் ஒருவரை காயப்படுத்திய, குண்டுத் தாக்குதலில் ஈடுபடவில்லை என்று அந்நாட்டு அரசு மறுத்திருக்கிறது.

கிளர்ச்சிக் குழக்களிடையே காணப்படும் போட்டிகளால் இந்தக் குண்டு தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்று கீவ்-விலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டபோது, லுகான்ஸ்க் குடியரசு என்று தாங்களாகவே அறிவித்து கொண்ட பிரிவினைவாதக் குழுவின் தலைவர் அவருடைய காருக்குள் இருந்திருக்கிறார்.

அவர் மருத்துவமனையில் நிலையாக நல்ல நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.