டெல்டா ஏர் நிறுவன கணினி அமைப்புகள் பழுது; ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு

கணினி அமைப்புகள் பெரிய அளவில் பழுதான காரணத்தால், தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்ட டெல்டா ஏர் விமான நிறுவனத்தின் உலகளாவிய சேவைகளில், தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்கள் இயங்க தொடங்கியுள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters

ஆனால் இந்த அமெரிக்க விமானச் சேவை நிறுவனம், அதன் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம் எனவும் தாமதம் ஆகலாம் எனவும் எச்சரித்துள்ளது.

ஆயிரக்கணக்கான பயணிகள், விமான நிலையத்தில் பயணச் சீட்டைக் காட்டி நுழையும் இடங்களில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே பறந்து கொண்டிருக்கும் விமானங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அட்லாண்டாவில் உள்ள அதன் தலைமையகத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக இந்த கோளாறு ஏற்பட்டதாகவும், அதை சரி செய்ய முயற்சித்து வருவதாகவும் டெல்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விமானச் சேவை நிறுவனங்கள் பல சமீப மாதங்களில் பல்வேறு கணினி பழுதுகளை சந்தித்து வரும் சம்பவங்கள் செய்திகளில் சூடாக அடிபட ஆரம்பித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.