வெப்பமண்டல புயலால் மெக்ஸிகோவில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, 38 பேர் பலி

படத்தின் காப்புரிமை AFP

சனிக்கிழமை அன்று நாட்டின் கிழக்கு பகுதியை தாக்கிய 'ஏல்' என்ற வெப்பமண்டல புயலால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளாலும், வெள்ளப்பெருக்காலும் 38 பேர் இறந்துள்ளதாக மெக்ஸிகோ ஆட்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

புயெப்லா மாநிலத்தின் தொலைதூரக் கிராமத்திலும், அதற்கு அடுத்திருக்கும் வெராகுருஸிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மக்களின் வீடுகள் புதையுண்டதால் தான் அதிகமானோர் இறந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

கரீபியன் பகுதியில் அழிவுகளை ஏற்படுத்திய பின்னர் முதல் வகை சூறாவளியான ஏல் பெலிஸியில் கரை கடந்தது.

அது வடக்கிற்கு நகர்ந்தபோது பலவீனமடைந்தாலும், பெய்த கனமழையாலும், பலத்தக் காற்றாலும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து கிழக்கு மற்றும் மத்திய மெக்ஸிகோவில் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.