பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் வணிகம்: அதிபர் குற்றச்சாட்டை அடுத்து பல அதிகாரிகள் சரண்

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரீகோ டுடர்டே, போதைப் பொருள் வணிகத்துடன் தொடர்புடையதாக சில அதிகாரிகளைப்பற்றி வெளிப்படையாக அறிவித்த ஒரு நாளைக்கு பிறகு, அது தொடர்பாக டஜன் கணக்கான அதிகாரிகள் சரணடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

சரணடைந்தவர்களில், மேயர்கள் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரிகளும் அடங்குவர்.

குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சிலர் தாங்கள் நிரபராதிகள் எனக் கூறினர்.

மேலும் சிலர் தங்களுக்கெதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் தங்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவித்து, அவமானப்படுத்திய அதிபரின் முடிவை எதிர்த்து கேள்விகள் எழுப்பி உள்ளனர்.

பிலிப்பைன்ஸின் தலைமை நீதிபதி, இந்த குற்றச்சாட்டு வரிசையில் இருக்கும் நீதிபதிகள், கைது செய்வதற்கான வாரண்ட் இல்லாமல் சரணடைய வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.