உகாண்டாவில் ஒரு பாலுறவினர் செயல்பாடு அனைத்தும் சட்டவிரோதம் என்கிறார் அமைச்சர்

Image caption உகாண்டாவின் நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டுத் துறையின் அமைச்சர்

உகாண்டாவில் ஆண் மற்றும் பெண் ஒரு பாலுறவுக்காரர்கள் சமூகம் எந்த செயல்பாடுகளை மேற்கொண்டாலும் அது சட்ட விரோதமானது மற்றும் உகாண்டா கலாச்சாரத்திற்கும் எதிரானது என்று உகாண்டாவின் நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டுத் துறையின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு பாலுறவுக்காரர்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பது உகாண்டாவில் வரவேற்கப்படத்தக்கது அல்ல என்று செய்தியாளர் சந்திப்பில் சைமன் லோகோடோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கம்பாலா என்ற பகுதியில் இருந்த இரவு கேளிக்கையகத்தில் நடைபெறவிருந்த ஒரு பாலுறவுக்காரர்கள் கொண்டாட்ட நிகழ்வை போலிசார் ஏன் நிறுத்தினார்கள் என்பதற்கும், கடந்த வியாழன் அன்று நடைபெறவிருந்த பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.

உகண்டாவை சேர்ந்த ஒரு பாலுறவுக்காரர்கள் சமூகங்கள் தங்களுக்கு தேவைப்பட்டால் பொது நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துவார்கள் என சமூக வலைத்தளத்தில் உகண்டாவின் முன்னணி ஒரு பாலுறவுக்காரர்களுக்கான உரிமைகள் ஆர்வலர் ஃப்ராங் முகிஷா அமைச்சரின் கருத்திற்கு பதிலடி தந்துள்ளார்.