ஏமன் தாக்குதல் பொதுமக்கள் 9 பேர் பலி

ஏமனில் செளதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான் வழித்தாக்குதலில் பொது மக்களில் 9 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல், ஏமன் தலைநகர் சானாவுக்கு வெளியே உள்ள கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

உள்ளூர் வாசிகளின் வாகனம் தாக்குதலுக்கு உள்ளான போது இருவர் பலியானதாகவும், மேலும் அருகே இருந்த மளிகை கடையில் மற்றவர்கள் கொல்லப்பட்டதாகவும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் செளதி தலைமையிலான கூட்டணி படையினர் அதிபர் அப்டிராபு மன்சூர் ஹைதியை ஆதரித்து வருகின்றனர்.

இந்த வான் வழித்தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்திகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.