சிரியாவில் குடிநீர், மின்சார தட்டுப்பாடு

சிரியாவில் நடந்து வரும் கடும் சண்டையால் அங்குள்ள 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குடிநீர் மற்றும் மின்சாரம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

மின்சாரம் மற்றும் நீர் அமைப்புகளை சரி செய்ய, மனதாபிமான அடிப்படையில் உடனடியாக யுத்தத்தை நிறுத்த வேண்டும் என ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது.

அரசு முற்றுகையிட்டிருக்கும், போராளிகளின் பிடியில் இருக்கும் நகரின் கிழக்கு பகுதியில் நடந்த முக்கிய கிளர்ச்சி தாக்குதலால் அரசுப் பிடியில் இருக்கும் அலெப்போவின் மேற்கு பகுதியில் பெருமளவு மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

நகருக்கான மோதலில் இருதரப்பும் பெருமளவில் படைகளை இறக்குவதால், கடுமையான ஒரு மோதலை எதிர்நோக்கக்கூடும்.