கறுப்பின மக்களிடம் பாரபட்சம் காட்டும் பால்டிமோர் போலிஸார்

அமெரிக்க நகரான பால்டிமோரின் போலிஸார் மீது, கருப்பின மக்களுக்கு எதிராக தொடர்ந்து பாரபட்சம் காட்டுவதாகவும் மற்றும் அதிகபட்ச படை பிரயோகத்தைப் பயன்படுத்துவதாகவும் அறிக்கை ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

பால்டிமோரில் பல வருடங்களில் நடந்திராத மிக மோசமான கலவரம் நடப்பதற்கு காரணமான, கடந்த ஏப்ரல் மாதம் போலிஸாரின் காவலில் உயிரிழந்த கருப்பின மனிதர் ஃபிரடி க்ரேயின் மரணம் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்த அறிக்கை ஆப்ரிக்க அமெரிக்கர்கள் பொருத்தமற்ற விகிதத்தில் குறிவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

சில அதிகாரிகள் நியாயமற்ற முறையில் ஆடைகளை கலைந்து சோதனைகளை மேற்கொண்டதாகவும் ஒரு கைதின் போது கருப்பின மனிதரின் வாய்ந்தான் அவரின் ஆயுதம் எனக் குறிப்பிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.