சீரழிவு நிலையில் அலெப்போ
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீரழிவு நிலையில் அலெப்போ - காணொளி

அலெப்போ மீது குளோரின் கொட்டப்பட்டதாக வந்த செய்தி உண்மையாயின் அது ஒரு போர்க்குற்றமாகும் என்று சிரியாவுக்கான ஐநாவின் சிறப்பு தூதுவர் ஸ்டபன் த மிஸ்துரா கூறியுள்ளார்.

இது குறித்து புலனாய்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மனித நேய உதவிகளை வழங்க ஏதுவாக, தமது அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் தினமும் மூன்று மணிநேரம் இடைநிறுத்துவதாக சிரியாவில் உள்ள ரஷ்ய படை அறிவித்துள்ளது.

ஆனால், கிளர்ச்சிக்காரர்களின் பகுதிகளின் மீது தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல் நடத்தப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.

கிளர்ச்சிப்படைகளால் அலெப்போவுக்கு பிபிசி அழைத்துச் செல்லப்பட்டது.