ஆப்கன் அதிபர் - தலைமை செயலதிகாரி பகிரங்க மோதல்

படத்தின் காப்புரிமை GETTY

நாட்டின் தலைமை செயலதிகாரியான அப்துல்லா அப்துல்லாவை ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி விமர்சித்துள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு செயல்பட்டு வருகின்ற இரண்டு அரசியல் எதிரணியினருக்கு இடையே தோன்றியிருக்கும் சமீபத்திய வெளிப்படையான சர்ச்சை இதுவாகும்.

கனி அதிபர் பதவிக்கு பொருத்தமற்றவர் என்று வியாழக்கிழமை அப்துல்லா விமர்சித்த பின்னர், அதிபர் கனியின் இந்த பதிலடி வந்துள்ளது.

அதிபர் கனி தன்னிச்சையாகவே முடிவுகளை எடுப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆளுகை விதிகளின்படி அப்துல்லாவின் கூற்று அமையவில்லை என்று அதிபர் தெரிவித்திருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலுக்கு பிறகு, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் நடைபெற்ற அதிகாரப் பகிர்வு உடன்பாட்டின் கெடு முடிவடைவதற்கு சற்று முன்னால் முறுகல் நிலை அதிகரிப்பதை அடையாளப்படுத்துவதாக இந்த தெளிவான கருத்து பரிமாற்றங்கள் பார்க்கப்படுகின்றன.