விநியோகப் பாதையை துண்டிக்க சிரியா கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

படத்தின் காப்புரிமை Reuters

கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகள் என இருதரப்பினரும் பிரித்து ஆக்கிரமித்துள்ள அலெப்போ நகரில், அரசு தரப்பின் பக்கத்தில் இருக்கும் முக்கிய வினியோகப் நிலப்பகுதி பாதையை துண்டிப்பதற்கு சிரியாவின் கிளாச்சியாளர்கள் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.

அலெப்போவின் புறநகரை அடைந்ததும் மாற்றுப் பாதையை அரசப்படை தேர்ந்தெடுக்க வேண்டியதை கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் ஒன்று ஏற்கெனவே கட்டாயமாக்கியுள்ளது.

கனாசேர் பாதை என்று அறியப்படும் பாதை வழியாக விநியோகம் வருவதைத் தடுக்கவே இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.