கபோன் தேர்தல்: வன்முறையைக் கைவிட சர்வதேச சமூகம் கோரிக்கை

வன்முறையிலிருந்து விலக வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு முறையான அனுமதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அனைத்து கட்சிகளுக்கும், சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்ததை அடுத்து கபோனில் அதிபர் தேர்தல் பிரசாரம் நடந்துவருகிறது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption அலி போங்கோ

தனது தந்தை உமர் போங்கோவின் மறைவிற்கு பிறகு கடந்த ஏழு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் அதிபர் அலி போங்கோ, மறு தேர்தல் வேண்டும் என்று கோரியுள்ளார். உமர் போங்கோ 40க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.

உமர் போங்கோவின் அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்த, ராஜாங்க அதிகாரியும் அரசியல்வாதியுமான ஜீன் பிங், 2014-ல் ஆளும் கட்சியில் இருந்து வெளியேறினார். அரசுக்கு உள்ள பொறுப்புக்கூறலின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.