பெண் அமைச்சரின் பதவியைப் பறித்த ஒயின்!

படத்தின் காப்புரிமை Mikael Lundgren I Regeringskansliet

சுவீடனில், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி, போலிசிடம் பிடிபட்ட அந்நாட்டு உயர் கல்வித்துறை அமைச்சர் எய்டா ஹட்சியலிக், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

தெற்கு நகரமான மல்மோவில் போலிசாரால் ஹட்சியாலிக் நிறுத்தப்பட்டார்.

அவர் இரு குவளை ஒயின் அருந்தியதாகத் தெரிவித்தார்.

சுவீடனில், வாகனம் ஓட்டுவோர், மது அருந்துவதற்கு அனுமதிக்கப்பட்ட அளவு மிகக் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டு, போக்குவரத்து விதிகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன.