அத்தியாவசிய பொருட்களுக்காக எல்லை தாண்டும் வெனிசுவேலா மக்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

ஓராண்டு மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் எல்லையை கடந்து ஆயிரக்கணக்கான வெனிசுவேலா மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கொலம்பியா செல்ல ஆரம்பித்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையால் கடுமையான பொருளாதார நெருக்கடியை வெனிசுவேலா சந்தித்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

பாதுகாப்பு காரணங்கள் என்று அது கூறியவற்றுக்காக வெனிசுவேலா முன்னதாக எல்லையை மூடியிருந்தது.

ஜூலை மாத்ததில் சில நாட்கள் எல்லையை கடக்க அனுமதிக்கப்பட்டபோது, சமையல் எண்ணெய், சர்க்கரை, மற்றும் அரிசியை வாங்கி சேமித்து கொள்ள இலட்சக்கணக்கான வெனிசுவேலா மக்கள் எல்லையை கடந்து சென்றனர்.

படத்தின் காப்புரிமை ARCTIC IMAGES Alamy Stock Photo

கடந்து செல்லும் முக்கிய நிலை ஒன்றில் அதிகாலைக்கு முன்னரே நீண்ட வரிசையில் காத்திருந்த வெனிசுவேலா மக்களை, “இரு நாடுகளும் சகோதரத்துவ நாடுகள்” என்று தெரிவிக்கும் பதாகைகளின் மூலம் கொலம்பியர்கள் வரவேற்றிருக்கிறர்கள்.

ஒவ்வொரு நாளும் 12 மணிநேரம் எல்லையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு வியாழக்கிழமை எட்டப்பட்டது.