ஜாம்பியா அதிபர் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் முன்னிலை

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஹாகையின்டே ஹச்சில்லமா

முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளரான ஹாகையின்டே ஹச்சில்லமா குறுகிய இடைவெளியில் முன்னிலை பெற்றிருப்பதாக ஜாம்பியா அதிபர் தேர்தலின் தொடக்க முடிவுகள் காட்டுகின்றன.

தற்போதைய அதிபர் எட்கர் லுன்குவை விட 6 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகளில் ஹச்சில்லமா முன்னிலை பெற்றிருப்பதை தேர்தல் ஆணையத் தரவுகள் சுட்டுகின்றன.

படத்தின் காப்புரிமை
Image caption எட்கர் லுன்கு

தேர்தல் முடிவுகளை தாமதப்படுத்த ஆளும் கட்சியோடு இணைந்து திரை மறைவில் செயல்படுவதாக தேர்தல் ஆணையம் மீது ஹச்சில்லமா சுமத்திய குற்றச்சாட்டை அது மறுத்திருக்கிறது.

57 சதவீதம் வாக்குப்புதிவு நடைபெற்றிருப்பதால், வாக்குகள் அனைத்தையும் எண்ணும் பணி எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் எடுக்கிறது என்று அது கூறியுள்ளது.

கடந்த ஆண்டு அப்போதைய அதிபர் மைக்கேல் சாடா இறந்ததை தொடர்ந்து, மிக குறுகிய இடைவெளியில் எட்கர் லுன்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.