காங்கோ: மனித சடலங்கள் அடங்கிய குவியல்

படத்தின் காப்புரிமை Reuters

காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட பொது மக்களில் 30 பேரின் உடல்களை ராணுவம் கண்டெடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படுகொலைகள் பெனி நகரில் ஒரே இரவில் நடைபெற்றதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்துக்கு ராணுவ பேச்சாளர் மார்க் அஸுரே தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை ஏ.டி.எஃப் என்ற போராளி குழு நடத்தி இருக்கலாம் என ராணுவம் சந்தேகிக்கிறது.

ஏ.டி.எஃப் என்பது உகாண்டாவில் இருந்து உருவாகிய ஆயுத குழுவாகும்.

காங்கோ ஜனநாயக குடியரசின் எல்லைகளில் அது இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.