மெக்ஸிகோ: ரகசியக் கல்லறையாக மாறுகிறதா வெராகுருஸ் மாநிலம்

Image caption கோப்புப்படம்

மெக்ஸிகோவில் காணாமல்போன குடும்ப உறுப்பினர்களை தேடி வரும் தாய்மார் குழு ஒன்று, வெராகுருஸ் மாநிலத்தில் 28 தனிநபர் கல்லறைகளையும், பலரும் புதைக்கப்பட்ட கல்லறைகளையும் கண்டறிந்துள்ளதாக கூறுகிறது.

இந்த மாநிலத்தை ரகசியக் கல்லறையாக மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் அனுமதித்துள்ளதாக சொலிசிட்டோ என்று அழைக்கப்படும் இந்த குழு தெரிவித்திருக்கிறது.

இந்த கல்லறைகள் அனைத்தும் வெராகுருஸ் நகரத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் பத்து ஹெக்டர் நிலப்பரப்பிற்குள் உள்ளன. அங்கு ஆறு மாதங்களுக்குள் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதைபோல தோன்றுகின்றன.

ஸிடாஸ் மற்றும் நியுவா ஜெனரேஸன் என்ற மெக்ஸிகோவின் இரண்டு பெரிய போதை மருந்து கும்பல்கள், இந்த மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க மோதிக் கொள்வது குறிப்பிடத்தக்கது.