ஏமன்: பள்ளி மீது தாக்குதல் நடத்தவில்லை என செளதி கூட்டுப் படை மறுப்பு

படத்தின் காப்புரிமை AFP

ஏமனில் பள்ளி ஒன்றை குறிவைத்து நடத்தப்பட்டதாக சொல்லப்படும் கொடூர வான் வழித்தாக்குதலை செளதி தலைமையிலான ராணுவ கூட்டுப் படையினர் மறுத்துள்ளனர்.

ஹவ்தி போராளிகள் குழந்தை பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து வந்த முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக செளதி தலைமையிலான ராணுவ கூட்டுப் படை தெரிவித்துள்ளது.

முன்னர், வடக்கு ஏமனில் ஹேடன் என்ற பகுதியில் உள்ள குரானிய பள்ளிக்கு குழந்தைகள் சென்ற போது நடந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் என்ற தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், 28 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 15 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் என எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.