ஏவுகணை எதிர்ப்பு அமைப்பிற்கு எதிராக முடி மழித்து தென் கொரியர்கள் போராட்டம்

படத்தின் காப்புரிமை AFP

தென் கொரியாவில் உள்ள சியோங்ஜு பகுதியில் உத்தேசிக்கப்பட்ட அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு நிலைநிறுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் ஆயிரம் தென் கொரியர்கள் தங்கள் முடியை மழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1945 ஆம் ஆண்டு ஜப்பானின் காலனித்துவ ஆட்சியிலிருந்து கொரியா தீபகற்பம் விடுதலை பெற்ற தினத்தின் ஆண்டு நிறைவுடன் இந்தப் போராட்டமும் நடைபெற்றது.

வட கொரியாவிடமிருந்து அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், கடந்த மாதம் அமெரிக்காவும், தென் கொரியாவும் சர்ச்சைக்குரிய ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு முறையை நிலைநிறுத்த ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.