நேபாளத்தில் பேருந்து விபத்து: 25 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் இன்று நடந்த பேருந்து விபத்தில், குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை NEPAL ARMED FORCE
Image caption கோப்பு படம்

மேலும், இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிலர் படுகாயமடைந்துள்ளனர். நேபாள தலைநகர் காத்மண்டு அருகே, அதிக பயணிகளுடன் சென்ற நெரிசல் மிகுந்த பேருந்து சாலையை விட்டு திசை மாறி, அங்கிருந்த ஒரு ஆற்றில் விழுந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை வான்வழியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல, சம்பவ இடத்துக்கு ஒரு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளது.

மலைப் பகுதியில் உள்ள சாலைகளில் நிலவும் மோசமான நிலை அல்லது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதாலும், நேபாளத்தில், ஒவ்வொரு வருடமும், நூற்றுக்கணக்கான மக்கள் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர்.