லூயிசியானா மாகாணத்தை பேரிடர் பகுதியாக அறிவித்தார் அதிபர் ஒபாமா

படத்தின் காப்புரிமை AP

அமெரிக்காவில் லூயிசியானா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள முன் எப்போதும் இல்லாத வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அம்மாகாணத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரசு உதவிகள் கிடைக்க உள்ளன.

படத்தின் காப்புரிமை AP

இந்த வெள்ளப்பெருக்கில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty

கடும் மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தவித்த 20,000க்கும் மேலான பொதுமக்களை அவசர சேவை பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் உறங்கி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AP

நீரின் அளவு அதிகரித்து வரும் நிலையில், அதில் சிக்கி உள்ளவர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு வழங்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.

இதுவரை 38 செ.மீ அளவு மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.