கிரைமியாவில் இராணுவ பயிற்சிகள் ஆரம்பம்

கிரைமியாவில் இராணுவ பயிற்சிகள் ஆரம்பம்

இணைக்கப்பட்ட கிரைமியா பிராந்தியத்தில் எதிரிகளின் தாக்குதலின் விளைவை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு இராணுவப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சியின் போது கதிரியக்க, உயிரியல் மற்றும் இரசாயன தாக்குதல்களுக்கான பாதுகாப்பு படைப்பிரிவுகள் ஈடுபடுத்தப்படுகின்றன. யாரும் தம்மை கண்காணிப்பதை தடுக்க செயற்கை புகை மண்டலத்தை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.

கடந்த வாரங்களில் கிரைமியா குறித்து ரஷ்யாவுடன் வாய்த்தர்க்கம் அதிகரித்த நிலையில், யுக்ரெய்ன் தமது எல்லையில் படைகளை உசார் நிலையில் வைத்ததை அடுத்து, அமைதி காக்குமாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லவ்ரோவ் கேட்டுள்ளார். கிரைமியாவின் கட்டுப்பாட்டை ரஷ்யா பிடித்துக்கொண்டதை அடுத்து கடந்த இரு வருடங்களாக அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.