இரான் பாதுகாப்பு படையினருடனான மோதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிரிழப்பு

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் நால்வரை தாங்கள் கொன்றுள்ளதாக இரான் நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை .
Image caption கோப்பு படம்

இரானின் வட மேற்கு நகரமான கெர்மன்ஷாவில் அவர்கள் பயன்படுத்திய வீட்டில் வைத்து மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இராக் நாட்டு எல்லையில் அமைந்துள்ள இதே பகுதியில் நடத்தப்பட்ட ஒரு ராணுவ நடவடிக்கையில் நான்காவது நபர் கொல்லப்பட்டார்.

ஐ.எஸ். அமைப்பின் மையப் பகுதிகள் அமைந்திருக்கும் இராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில், ராணுவ ரீதியான மோதல்களில் இரான் ஈடுபட்டுள்ளது.

அண்மை மாதங்களில், தங்களின் நாட்டை ஐ.எஸ். அமைப்பு குறி வைத்து தாக்குதல் நடத்துவதாக இரான் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.