குடியேறிகள் மீது அதி தீவிர பரிசோதனை : ட்ரம்ப்

குடியேறிகள் மீது அதி தீவிர பரிசோதனை : ட்ரம்ப்

கடும்போக்கு இஸ்லாமிய பயங்கரவாதம் என்று தான் கூறுவதை தோற்கடிப்பதற்கான தனது திட்டத்தை குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் விளக்கியுள்ளார்.

குடியேறிகளை அதி தீவிரமாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பை நசுக்க அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை பயன்படுத்துவேன் என்று அவர் கூறியுள்ளார்.