கலிபோர்னியா: காட்டுத் தீயினால் 80000 பேர் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள தீவிரமான காட்டுத் தீயினால், தங்கள் வீடுகளை விட்டு 80000 மக்கள் வெளியேற்றப்பட்டதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை KABC
Image caption கோப்பு படம்

லாஸ் ஏஞ்சல்ஸின் கிழக்கு பகுதியில் உள்ள சான் பெர்னார்டினோ நகர் அருகே வறண்ட பள்ளத்தாக்குகளிலும், மலைப்பகுதி குடியிருப்புகளிலும் பரவிய இந்த காட்டுத்தீ எண்ணற்ற கட்டிடங்களை அழித்துள்ளது.

காட்டுத் தீயின் கோர தாண்டவத்தால் வனப்பகுதி நிலம் எரிந்து கொண்டிருக்கிறது. தெற்கு கலிபோர்னியா மற்றும் நெவாடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் ஆகியவற்றுக்கு இடையேயான பிரதான சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் கோடையில் கலிபோர்னியாவில் பேரழிவினை உண்டாக்கிய காட்டுத்தீ தொடர்களில் இதுவும் ஒன்றாகும்.