ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

‘குளோரின்’ தாக்குதலிருந்து மீண்டு வரும் சிறுமி

சிரியாவில் வான் தாக்குதல்களை மேற்கொள்ள முதல் முறையாக இரானில் உள்ள விமான தளத்தை பயன்படுத்த ரஷ்யா தொடங்கியுள்ளது. அலெப்போவில் பல பிராந்தியங்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளன. இதில் இருபத்து ஏழு பொது மக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் குழுக்கள் கூறுகின்றன.

அலெப்போவில் நடந்ததாக கூறப்படும் குளோரின் வாயு தாக்குதலை ஐநா விசாரித்து வருகிறது. அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட சாமியா என்ற சிறுமி, அருகில் லெபனானில் உள்ள வீட்டில் தற்போது குணமடைந்து வருகிறார். அவரை பிபிசி சந்தித்தது.