முஸ்லிம் பெண்களின் நீச்சல் உடைக்குத் தடை: ஃபிரான்ஸ் பிரதமர் ஆதரவு

சில முஸ்லிம் பெண்களால் பயன்படுத்தப்படும் முழு நீள நீச்சல் உடையான புர்கினிஸுக்கு நாட்டின் பல பகுதிகளில் விதிக்கப்பட்ட தடைக்கு பிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் ஆதரவு அளித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty

பிரான்ஸ் நாட்டின் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இது பெண்களை இழிவுபடுத்துதல் போன்றது என்றும் பிரான்ஸ் நாட்டின் கொள்கைகளுடன் ஒத்துப்போகாது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் ஏழு கடற்கரை நகரங்கள் புர்கினிஸிற்கு தடை விதித்துள்ளது.

அதே நேரத்தில், நாட்டை சமீப காலமாக அச்சுறுத்தும் ஜிகாதிகளின் தாக்குதலுக்கு இது ஒரு தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.