மலேசிய எண்ணெய் கப்பல் இந்தோனீஷியாவுக்கு கடத்தல்

9 லட்சம் லிட்டர் டீசல் அடங்கிய மலேசிய எண்ணெய்க் கப்பல் ஒன்று கடத்திச் செல்லப்பட்டு, இந்தோனீஷிய கடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக மலேசிய நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை MMEA

கடத்தப்பட்ட மலேசிய கப்பலான வீயெர் ஹார்மோனி, நான்கு லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான டீசல் எரிபொருளை எடுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்ததாக மலேசியாவின் கடல்சார் அமலாக்க முகமை தெரிவித்துள்ளது.

இந்தோனீஷிசியாவில் உள்ள படாம் துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடற்பகுதிக்கு மலேசிய எண்ணெய் கப்பல் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று தாங்கள் நம்புவதாக மலேசிய முகமை தெரிவித்துள்ளது.

இந்த கப்பலை கடத்தியவர்களின் அடையாளம் எதுவும் இன்னமும் தெரியவில்லை.