தென் கொரியாவுக்கு தப்பிய வட கொரிய தூதரக அதிகாரி

வட கொரியாவின்துணைத் தூதராக பிரிட்டனில் முன்பு பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர், தென் கொரிய தலைநகர் சியோலுக்கு தனது குடும்பத்துடன் வந்துவிட்டதாக தென் கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை GETTY IMAGES
Image caption தே யோங் ஹொ (படத்தின் வலப்பக்கம்)

லண்டனுக்கான முன்னாள் துணை தூதராக இருந்த தே யோங் ஹொ தான், உயர் பதவியில் இருக்கும் வட கொரிய தூதர் ஒருவர் நாட்டை விட்டுச் செல்லும் அதிகாரி என்று நம்பப்படுகிறது.

சியோலில் உள்ள அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர், பரந்த கொள்கையுடைய ஜனநாயகத்தின் மீது அவர் விருப்பம் கொண்டதாலும் தனது குடும்பத்தின் நலனுக்காகவும் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வட கொரியா மற்றும் லண்டனில் உள்ள அதன் தூதரகங்களில் இருந்து எந்த செய்தியும் வரவில்லை.