இஸ்லாமியவாதத் தீவிரவாதிகளிடமிருந்து கடலில் நீந்தியே தப்பிய இந்தோனீசிய பிணைக் கைதி
தனது தலையை வெட்டி விடுவதாக அச்சுறுத்தியால், பிலிப்பைன்ஸில் தன்னை பிடித்து வைத்திருந்து இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து இந்தோனீசிய பிணைக் கைதி ஒருவர் கடலில் நீந்தியே தப்பித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தில், தங்களின் கப்பலிலிருந்து முகமது சாஃப்யானும் மற்ற ஆறு மாலுமிகளும் அபு சாயாஃப் குழுவினரால் கடத்தப்பட்டனர்.
இருளை பயன்படுத்திக் கொண்டு, கடலில் குதித்த முகமது சாஃப்யான், மீன்பிடி வலையில் மாட்டிக் கொண்டு கரைக்கு அருகே அடுத்த நாள் காலையில் அருகாமை கிராமவாசிகளால் கண்டறியப்பட்டதாக பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரின் மற்ற கப்பல் தோழர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
குண்டு வெடிப்புகளையும் , தலையை வெட்டிவிடும் வன்முறை சம்பவங்களையும் நடத்தும் அபு சாயாஃப் குழு, தெற்கு பிலிப்பைன்ஸில் ஒரு சுதந்திர இஸ்லாமிய மாகாணம் உருவாக்க நடத்தும் போராட்டத்தில், மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.
அண்மையில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்புடன் நெருங்கி இயங்கப் போவதாக அபு சாயாஃப் குழு சூளுரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.