மில்வாவ்கி போராட்டங்களுக்கு ஹிலரியே பொறுப்பு: டிரம்ப் குற்றச்சாட்டு

திறமையான போலீஸ் நடவடிக்கைகள் இல்லாமையே, தங்களின் அருகாமை பகுதிகளில் நடக்கும் வன்முறையால் பாதிக்கப்படும் ஆப்ரிக்க-அமெரிக்க சமூகத்தினருக்கு கெடுதல் விளைவிக்கிறது என்று அமெரிக்க குடியரசு கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோப்பு படம்

மில்வாவ்கி அருகே நடத்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப், போலீசார் மீதான போர் முடிவடைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அவர் உரையாற்றிய மில்வாவ்கி பகுதியில், ஒரு போலீஸ் அதிகாரியால், கறுப்பின நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிறகு பல நாட்கள் போராட்டங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் போலீசாரை இனவெறி சக்தியாக பார்ப்போரை ஆதரித்ததன் மூலம், மில்வாவ்கி பகுதியில் நிலவிய அமைதியின்மைக்கு தனது போட்டியாளரான ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் பொறுப்பாகிறார் என்று டிரம்ப் குற்றம்சாட்டினார்.