கறுப்பின மக்களுக்கு எதிரான இனபாகுபாடு அதிகரிப்பு: புதிய ஆய்வறிக்கை கண்டுபிடிப்பு

பல இடங்களிலும், கறுப்பின மற்றும் இன சிறுபான்மை மக்கள் சந்திக்கும் இடர்களை '' ஆழப்பதிந்துள்ள சமத்துவமின்மை'' என்று விவரித்து எச்சரித்துள்ள ஒரு புதிய அறிக்கை, கடந்த 5 வருடங்களில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது என்று கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை

கடந்த ஜூன் மாதத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு ஆதரவாக பிரிட்டன் வாக்களித்த பின்னர், வெறுப்புணர்வின் காரணமாக நடக்கும் குற்றங்கள் ''முன்னேப்பேதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது'' என்று சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் வெள்ளை இன மக்கள் கொல்லப்படுவதை விட கறுப்பின மக்கள் கொல்லப்படுவது இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறும் , வெள்ளை இனத்தவர்களுடன் ஒப்பிடுகையில் கறுப்பின மக்கள் மீது வழக்கு தொடரப்படுவதும், தண்டனை வழங்கப்படுவதும் மூன்று மடங்கு அதிகமாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறும் உள்ளதாக அவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.