‘ட்விட்டரில் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு அதிகரிப்பு’

‘ட்விட்டரில் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு அதிகரிப்பு’

சமூக வலைத்தளமான ட்விட்டரில், ஆங்கிலத்தில் உலகளவில் அனுப்பப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு சார்ந்த ட்வீட்கள் அதிக அளவில் உயர்ந்திருப்பதாக பிபிசியால் பார்க்கப்ப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

பிரிட்டனில் கடந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் இஸ்லாமிய எதிர்ப்பு ட்வீட்கள் ஆங்கிலத்தில் சுமார் ஏழாயிரம் அனுப்பப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரலில் இது சராசரியாக தினமும் இரண்டாயிரத்து ஐநூறாக இருந்தது.

நீஸ் நகரில் நடந்த தாக்குதலில் கிறிஸ்தவ பாதிரியார் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ஜூலையில்தான் இஸ்லாமிய வெறுப்பை கக்கும் ட்வீட்கள் மிக அதிகமாக அனுப்பப்பட்டுள்ளன என்று இது குறித்து ஆராய்ந்த ஒரு அமைப்பு கூறுகின்றது.