துருக்கியில் கார் குண்டு வெடிப்பு: மூவர் உயிரிழப்பு

துருக்கியின் கிழக்கு பகுதி மாகாணமான வானில், இரான் நாட்டு எல்லையருகேயுள்ள பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையம் மற்றும் ராணுவ குடியிருப்புகளுக்கு அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தால், மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், நாற்பது பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோப்பு படம்

சம்பவம் நடந்த இடத்தில், பல போலீஸ் வாகனங்களும், மருத்துவ ஊர்திகளும் விரைந்து கொண்டிருப்பதை தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ள படங்கள் காண்பித்துள்ளன.

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பது யார் என்று உடனடியாக தெரியவில்லை.

துருக்கி பாதுகாப்பு படையினரை குறிவைத்து கார் குண்டு வெடிப்பு தாக்குதல்களை குர்திய தீவிரவாதிகள் அடிக்கடி நடத்துகின்றனர்.