2 வாரங்களில் தானியங்கி கார் சேவை: ஊபர் அறிவிப்பு

இணைய வழி டாக்ஸி சேவை நிறுவனமான ஊபர், தானியங்கி கார் சேவையை அடுத்த இரு வாரங்களில் தொடங்கவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை GETTY IMAGES

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தொழிட்நுட்பத்தின் உருவாக்கத்திற்கு இது ஒரு மைல் கல்லாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இம்மாத கடைசியிலிருந்து, அமெரிக்க நகரான பிட்ஸ்பர்க்கில் உள்ள வாடிக்கையாளர்கள், தங்களது அலைபேசியில் உள்ள ஊபர் செயலியின் மூலம் தானியங்கி கார்களை அழைக்க முடியும்.

அவர்களுக்கு, ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார் வழங்கப்படும்

தேவைப்பட்டால் தானியங்கி கார்களை கட்டுப்படுத்த முதலில் ஓட்டுநருடன் இயக்கப்படும் என ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது.