லண்டன் வர்த்தகத்தில் 51 டாலருக்கு அதிகமாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

லண்டனில் இன்று நடைபெற்ற வர்த்தகத்தின் போது, கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 51 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களுடைய உற்பத்தி அளவுகளை, ஒரே நிலையில் வைத்திருக்க முடிவெடுக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக நிதிச்சந்தை கணிக்கும் நிலையில் விலை உயர்ந்துள்ளது.

அடுத்த மாதம் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பானது கூட உள்ளது. அந்தக் கூட்டத்தில், உற்பத்தியைக் குறைக்கும் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த அமைப்பு அல்ஜீரியாவில் அதிகாரப்பூர்வமற்ற ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதில், இரான் மற்றும் சவுதி அரேபியா தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு சர்வதேச அளவில் பொருட்களின் தேக்கம் நிலை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் செல்கின்றன.