ஜெர்மனியில் புர்காவுக்கு தடை வருமா?

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஜெர்மனியில் புர்காவுக்கு தடை பற்றிய விவாதம் ஏங்கலா மெர்கலின் ஆளும் கூட்டணியை பிளவுப்படுத்தி இருக்கிறது

முஸ்லிம் பெண்கள் தலை மற்றும் முகத்தையும், சிலவேளைகளில் உடல் முழுவதையும் மூடிவிடும் புர்கா அணிவதை முற்றிலும் தடை செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிராக இருக்காது என்று ஜெர்மனி உள்துறை அமைச்சர் டெர்மாஸ் டு மென்ஸியர் சொன்ன ஒரு நாளைக்கு பின்னர், ஒரு பகுதி புர்கா தடைக்கு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

சமூக ஒழுங்குக்கு தேவைப்படுகின்றபோது, பெண்கள் தங்களுடைய முகத்தை காட்டுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை உருவாக்க அரசு விரும்புவதாக வியாழக்கிழமை ஜெர்மனி தொலைக்காட்சி ஒன்றில் டு மென்ஸியர் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஒரு பகுதி புர்கா தடை, பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பாலர் பள்ளிகள், பொது அலுவலகங்கள் மற்றும் வாகனம் ஓட்டும்போது புர்கா அணிவதை தடை செய்யும்

நாடாளுமன்ற அனுமதி பெற வேண்டிய இந்த முன்மொழிவானது, பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பாலர் பள்ளிகள், பொது அலுவலகங்கள் அல்லது வாகனம் ஓட்டுகிறபோது யாராக இருந்தலும் புர்கா அணிவதை தடைசெய்யும்.

புர்கா அணிவதை தடைசெய்வது பற்றிய விவாதம், சான்சலர் ஏங்கெலா மெர்கலின் ஆளும் கூட்டணியை பிளவுப்படுத்தி இருக்கிறது.