அமெரிக்க போலிசிடமிருந்து தப்பிக்க வயதான நபராக தோற்றத்தை மாற்றியவர் கைது

அமெரிக்காவில் போலிசிடம் இருந்து தப்பியோட வயதான நபர் போல தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட ஒரு நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை ATFHQ
Image caption வயதான நபர் போல தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட 31 வயதான ஷான் மில்லர்

போலிஸ் அதிகாரிகள் மாசசூசெட்ஸில் தென் யார்மோத்பகுதியில் ஷான் மில்லரை அவரது இல்லத்தில் இருந்து வெளியே வர உத்தரவிட்டனர்.

அவர் வயதான தோற்றத்தில் வெளியே நடந்து வந்தார். வெளியே வந்தது உண்மையில் தாங்கள் தேடிய 31 வயதான ஷான் மில்லர் என்று போலிஸ் அதிகாரிகள் புரிந்துகொண்டு அவரை கைது செய்தனர்.

ஷான் மில்லர் ஹெராயின் கடத்தல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏப்ரல் மாதம் முதல் தேடப்பட்டு வருகிறார்.

அதிகாரிகள் அவரது வீட்டை சோதனை செய்த போது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட இரண்டு துப்பாக்கிகளைகளையும், 30,000 டாலர் (23,000 பவுண்ட்) ரொக்கத்தையும் கண்டுபிடித்தனர்.

மது, புகையிலை மற்றும் ஆயுதப்படைக்கான ஆணையம் மில்லர் மீதான குற்றச்சாட்டு நொவ்டி தெருவில் உள்ள கும்பல் மீதான ஒரு நீண்ட புகாரின் ஒரு பகுதி என்றும் மேலும் மற்ற 12 நபர்களும் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துளளன்.