உலகின் நீளமான, உயரமான கண்ணாடி பாலம் திறப்பு

சீனா, உலகின் நீளமான மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தை சுற்றுலா பயணிகளுக்காக திறந்துவைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை IMAGINECHINAREXSHUTTERSTOCK

இரண்டு மலைக் குன்றுகளை இணைக்கும்படியான இந்த கட்டமைப்பு, ஹுனான் மாநிலத்தில் ஜான்ஜாஜி பள்ளத்தாக்கிற்கு மேல், சுமார் 300 அடி உயரத்தில் உள்ளது.

படத்தின் காப்புரிமை AP

பார்வையாளர்கள் பள்ளத்தை, 99 மூன்றடுக்கு கண்ணாடி பேனல்கள் வழியாக பார்க்கலாம்.

படத்தின் காப்புரிமை EPA

ஒரு வண்டி செல்லும் அளவிற்கு பலமானதாக உள்ள இந்த பாலத்தில் பாதசாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு நாளில் 8 ஆயிரம் பேர் சென்று வர முடியும்.

படத்தின் காப்புரிமை AP

கண்ணாடி பாலங்களும், மலைப் பாதைகளும் சீனாவில் மிக பிரபலம். வித்தியாசமான புகைப்படம் எடுப்பதற்கான, குறிப்பாக திருமண புகைப் படங்கள் எடுக்க வாய்ப்புகளை இந்த பாலம் வழங்குகின்றன.