அமெரிக்காவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் சிரியா அரசுப்படை வான்வழி தாக்குதல்

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, சிரியா அரசின் போர் விமானங்கள் வானில் பறக்க ஹாசாகா நகரில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒய்பிஜி என்ற சிரியாவின் குர்து இன ஆயுதப்படை கட்டுப்பாட்டில் இருக்கும் நகரப்பகுதிகளில் பெரும்பாலும் தாக்குதல் நடத்துவதை விமானங்கள் தொடர்ந்து வருகிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.

படத்தின் காப்புரிமை AFP

ஆனால் தரையில் கடும் போர் நடைபெற்று வருவதாக உள்ளூர் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிரியாவின் விமானப் படையால் இலக்கு வைக்கப்படும் கூட்டணி தரைப்படைப் பிரிவுகளை பாதுகாக்க அமெரிக்கத் தலைமையிலான கூட்டுப்படை விமானத்தை வியாழக்கிழமை அனுப்பியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.