ஹிலரியை பின்தொடரும் தனிப்பட்ட மின்னஞ்சல் சர்ச்சை

படத்தின் காப்புரிமை AP

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன், அமெரிக்காவின் வெளியுறவு செயலராகப் பணியாற்றியபோது பயன்படுத்திய தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கு பற்றிய ஒரு வழக்கில் எழுத்துப்பூர்வ பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த பிரச்சினை தொடர்பாக வெளியுறவு துறை மீது வழக்கு தொடர்ந்திருக்கும் ஒரு கன்சர்வேட்டிவ் சட்ட விவாதக் குழுவான ஜூடிசியல் வாட்ச் அமைப்பு, ஹிலரி நேரில் வந்து சாட்சியம் அளித்து உறுதி மொழி வழங்க வேண்டும் என்று விரும்புகிறது.

அமெரிக்கப் பெடரல் புலனாய்வு அமைப்பு ஹிலரி மீது வழக்கு எதையும் பதிவு செய்யாமல் கடந்த மாதம் இந்த வழக்கை முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.