பிலிப்பைன்ஸில் புதிய யுத்த நிறுத்தத்திற்கு ஒப்புதல்

நார்வேயில் அடுத்த வாரம் நடக்கவுள்ள அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, பிலிப்பைன்ஸ் அரசு மற்றும் கம்யூனிஸ்ட் போராளிகள் ஒரு புதிய யுத்த நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இது ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

படத்தின் காப்புரிமை

அரசின் ஆலோசகர் இந்த போர் நிறுத்த உடன்பாடு தேவைப்படும் வரை நீடிக்கும் என்றார்.

கம்யூனிஸ்ட்களின் புதிய மக்கள் ராணுவம் அதிபர் ரொட்ரிகோ ட்யூடெர்த் கொண்டுவந்த காலக்கெடுவிற்குள் பதில் அளிக்க தவறிவிட்டது என்பதால் அவர் ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தார்.

பிலிபைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ ட்யூடெர்த் முடிவிற்கு கொண்டு வர எண்ணும் நீண்ட காலமாக நடந்து வரும் இரண்டு கிளர்ச்சிகளில் இது ஒன்றாகும்