ஐ.எஸ் படுகொலைக்கு உதவிய 36 பேருக்கு இராக்கில் தூக்கு

படத்தின் காப்புரிமை AFP

இஸ்லாமிய அரசு என அழைத்துக் கொள்ளும் தீவிரவாத அமைப்பினர் மேற்கொண்ட படுகொலையில் தொடர்புடைய 36 பேரை இராக் அரசாங்கம் தூக்கிலிட்டுள்ளது.

2014 -ல் நடைபெற்ற இந்தப் படுகொலைகளின் போது, சுமார் 1,700 ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை AP

அதில் பெரும்பாலானவர்கள் ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள்.

ஸ்பைக்கர் முகாம் படுகொலைகள் என பிரபலமாக அறியப்பட்ட இந்த சம்பவம் ஷியா பிரிவினரை வெகுண்டு எழ செய்து ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக குழுவாக போராட உதவியாகவும் இருந்தது.

படத்தின் காப்புரிமை AFP

இந்த படுகொலையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிலர் மீது, மிக விரைவாக விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சட்ட நடைமுறை குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.