கேமரூனில் தற்கொலை குண்டு தாக்குதல்: 3 பேர் பலி

வடக்கு கேமரூனில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், மூன்று பேர் பலியாகியுள்ளனர். இருபதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

இஸ்லாமியவாத தீவிரவாத குழுவான போகோ ஹராமிற்கு எதிராக, சர்வதேச படை சண்டையிட்டு வரும், மோரா நகரத்தில் உள்ள சந்தைக்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்துள்ளது.

அந்த குழு உருவான நைஜீரியாவின் எல்லைப் பகுதியில் இந்த நகரம் அமைந்துள்ளது.

அமெரிக்க அரசு செயலர் ஜான் கெர்ரி, வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நைஜீரியாவில் விஜயம் செய்யவுள்ளார்; அப்போது போகோ ஹராம் அமைப்பிற்கு எதிராக அரசின் பிரசாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது பயணத் திட்டத்தில் முதலாவதாக, கென்யாவுக்கு செல்கிறார் ஜான் கெர்ரி. இன்னொரு இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான அல்-ஷபாபுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக, கென்யா அரசுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.