காங்கோ எதிர்கட்சி கூட்டணியால் தேசிய அளவிலான பேச்சுவார்த்தை நிராகரிப்பு

தேசிய அளவில் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சமீபத்திய முயற்சிகளை, காங்கோ ஜனநாயகக் குடியரசில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் எதிர்க்கட்சி கூட்டணி நிராகரித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மத்தியஸ்தராக விளங்கும் எடிம் கோட்ஜோ, அரசியல் சாசனத்திற்கு எதிராக அதிபர் ஜோசப் காபிலா மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்வதற்கு தீர்க்கமுடன் இருப்பதாக, ஒரு அவசரக் கூட்டத்திற்கு பின்னர் வெளியிட்ட அறிக்கையில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை

சில அரசியல் கைதிகளை அரசு விடுதலை செய்த பின்னர், டோகோவின் முன்னாள் பிரதமரான கோட்ஜோ ஆயத்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு குறித்திருக்கும் செவ்வாய்க்கிழமை அன்று, பொது வேலைநிறுத்தத்திற்கு இந்த கூட்டணி அழைப்பு விடுத்திருக்கிறது.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய தேர்தல் தாமதமாக நடக்க இருக்கிறது.

இந்த தேர்தல் நடைபெறும் வரை அதிபர் காபிலா பதவியில் நீடிக்கலாம் என்று காங்கோ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.